YouTurn

இட ஒதுக்கீடு ரத்து செய்ய ஆலோசிக்கப்படும் என ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசியதாக பாஜக பரப்பும் பொய்!

இட ஒதுக்கீடு ரத்து செய்ய ஆலோசிக்கப்படும் என ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசியதாக பாஜக பரப்பும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அனைத்து ஜாதியினருக்கும் சமூக நீதியில் சரியான பிரதிநிதித்துவம் அடைந்திருக்கும் போது ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி காங்கிரஸ் பரிசீலிக்கும். ஆனால் அப்படியான சூழல் இந்தியாவில் இல்லை என்று ராகுல் பேசியதைத் திரித்துப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

Rahul Gandhi's Drama "Reservation"

rahul gandhi reservation news

X link

விரிவான விளக்கம்

அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு ஒரு நிகழ்ச்சியில், ’நாங்கள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி ஆலோசிப்போம்’ எனக் கூறியதாக ஒரு சிறிய வீடியோ ‘தமிழ்நாடு பாஜக-வின்’ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 


https://x.com/i/web/status/1834456338677567705


தேர்தலுக்கு முன்னதாக இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பேசிய ராகுல் காந்தி, தேர்தல் முடிந்ததும் அதனை ரத்து செய்ய ஆலோசிப்போம் என அமெரிக்காவில் பேசியுள்ளதாக அப்பதிவில்  குறிப்பிடப்பட்டுள்ளது.


உண்மை என்ன?


அமெரிக்கா, வாஷிங்டன்னில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசிய முழு வீடியோ அவரது யூடியூப் பக்கத்தில் உள்ளது. அதில், அபூர்வா ராமகிருஷ்ணன் என்பவர், ஜாதிவாரி இட ஒதுக்கீட்டில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரசின் நிலைப்பாடு என்ன? சமூக ஏற்றத்தாழ்வைச் சரி செய்ய  ஜாதிவாரி இட ஒதுக்கீடு வழங்குவதுதான் நிரந்தர தீர்வாகுமா? (53:35). என்கிற பொருளில் கேள்வி ஒன்றை முன் வைக்கிறார். 



இந்திய அரசாங்கத்தில் நிதி முடிவுகள் பெரும்பாலும் 70 அதிகாரிகள் தான் எடுக்கிறார்கள். 70 பேரில் ஒரு பழங்குடியினர், 3 தலித், 3 பிற்படுத்தப்பட்டோர், ஒரு சிறுபான்மையினர் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதம் உள்ள மக்கள் இந்திய அரசில் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளனர். அவர்களுக்குச் சரியான பிரதிநிதித்துவம் இல்லை


மேலும், இந்தியாவில் உள்ள முதலாளிகளைப் பட்டியலிடுங்கள். இந்தியாவில் 50 சதவீதம் OBC உள்ளனர். ஆனால், இந்த பட்டியலில் முதல் 200 பேரில் ஒருவர்தான் OBC. இதுதான் பிரச்சனை. இந்தியா அனைவருக்கும் நியாயமான இடமாக மாறும் போது ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு ரத்து செய்வது பற்றி காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும். ஆனால், அப்படியான சூழல் இந்தியாவில் இல்லை எனக் கூறியுள்ளார். 


அதாவது, இந்தியாவில் அனைத்து ஜாதியினருக்கும் சரியான சமூக நீதி (பிரதிநிதித்துவம்) இல்லை. அப்படி வரும் காலத்தில் இட ஒதுக்கீடு ரத்து செய்வது பற்றி காங்கிரஸ் பரிசீலிக்கும் என ராகுல் சொன்னதை பாஜக எடிட் செய்து திரித்துப் பொய் செய்தி பரப்புகிறது. 


முடிவு: 


இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் காங்கிரஸ் ஆலோசிக்கும் என ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசியதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது. இந்தியாவில் அனைத்து ஜாதியினருக்கும் சரியான பிரதிநிதித்துவம் இல்லை. அப்படி வரும் காலத்தில் இட ஒதுக்கீடு ரத்து செய்வது பற்றி காங்கிரஸ் பரிசீலிக்கும் என்றுதான் ராகுல் பேசியுள்ளார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.